Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 31 , மு.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனம் நடத்திய பிரீமியர் லீக் டிவிசன் - 2 கால்ப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில், தேசிய சம்பியனாக வெற்றியீட்டிய கல்முனை பிறிலியன்ட் விளையாட்டுக்கழக வீரர்களுக்கு மருதமுனையில் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது.
மருதமுனை கோல்ட் மைன்ட் விளையாட்டுக் கழகத்தினர் வழங்கிய இந்த வரவேற்பு நிகழ்வில், கோல்ட் மைன்ட் கழக ஸ்தாபகர் முசத்திக் ஜே. முகம்மட், தலைவர் வை.கே. ரஹ்மான், கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.ஆர்.எம். அமீர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பிறிலியன்ட் கழக வீரர்களை பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட கால்ப்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் சட்டத்தரணி ஏ.எம். றகீப் மற்றும் செயலாளர் ஏ.எம். இப்றாகீம் ஆகியோரும் கலந்து கொண்டு வெற்றிபெற்ற வீரர்களுக்கு வரவேற்பளித்தனர்.
பிறிலியன்ட் கழகம் பெற்றுக் கொண்ட இந்த வெற்றியானது அம்பாறை மாவட்ட விளையாட்டுக் கழகமொன்று கால்ப்பந்தாட்டப் போட்டியில் பெற்றுக் கொண்ட முதலாவது தேசிய சாதனையென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
31 minute ago
2 hours ago
Nafar Saturday, 06 November 2010 08:41 PM
மிகவும் பெருமையாக இருக்கிறது.
Reply : 0 0
uwais Wednesday, 05 January 2011 04:10 PM
சிறந்த அணியாக திகழும் கல்முனை பிரிலியன்ட் கழகத்திற்கு எமது ஊர் சார்பாக மனமாந்த் வாழ்துகள்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago