Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Kogilavani / 2010 நவம்பர் 02 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
36 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்ட கிழக்கு மாகாண அணி இன்று திருகோணமலையை வந்தடைந்தது. அவ்வணிக்கு திருகோணமலையில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இவ்வணியில் பங்குக்கொண்ட வீரர்கள் கல்விக்கற்ற செல்வநாயகபுரம் இந்து மகா வித்தியாலயம், புனித சூசையப்பர் கல்லூரி, திருகோணேச்சரா இந்துக் கல்லூரி ஆகியவற்றிற்கு அழைத்து செல்லப்பட்டனர். இவர்களுக்கு அதிபர், ஆசிரியர்கள் மகத்தான வரவேற்பளித்தனர்.
புனித சூசையப்பர் கல்லூரியின் அதிபர் வாழ்த்து தெரிவிக்கும் பதக்கங்களை அணிவித்து அணி வீரர்களை கௌரவப்படுத்தினார். ஸ்ரீ கோணேச்சரா இந்துக் கல்லூரியின் வரவேற்பில் கலந்துக்கொண்ட திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் பஸீர் அமீர், செயலாளர் டொக்டர் சயந்தன் ஆகியோர் வெற்றிப்பெற்ற அணி வீரர்களுக்கு பாதணிகளை வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
1 hours ago