Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 நவம்பர் 05 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
இலங்கை இராணுவத்தின் 22 படைப்பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட வலைப்பந்து பயிற்சி முகாம் இன்று வெள்ளிக்கிழமை காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
20 பாடசாலைகளைச் சேர்நத 200க்கும் மேற்பட்ட மாணவிகள் இதில் பங்கு கொண்டார்கள். இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் பயிற்றுவிப்பாளர்கள் இவர்களுக்கான பயிற்சிகளை வழங்கினர்.
22ஆம் படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி பிரிகேடியர் சுமேத பெரோரா பயிற்சி முகாமினை ஆரம்பித்து வைத்தார்.
கிழக்கு மாகாண கல்வி திணைக்கள உடற்கல்வி பிரதி கல்வி பணிப்பாளர் ஜே.உதயரெட்ணம், விளையாட்டு திணைக்கள உதவிப் பணிப்பாளர் ஜஸ்ரின் பெர்ணாண்டோவும் இம்முகாம் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .