2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

பிரமியர் லீக் கால்ப்பந்தாட்ட போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவு

Menaka Mookandi   / 2010 நவம்பர் 09 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

பிரமியர் லீக் கால்ப்பந்தாட்ட போட்டித் தொடரில் மாத்தளை ஜொலிபோய்ஸ் கழகத்திற்கும், கண்டி மாநகர சபை அணிக்குமிடையே கண்டியில் நேற்று மாலை இடம்பெற்ற போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தது.

கண்டி போகம்பறை மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் முதற்பாதியில் இரு அணிகளும் எவ்வித ஓட்டமும் பெறவில்லை. போட்டியின் இரண்டாவது பாகத்தின் போது மாத்தளை ஜொலிபோய்ஸ் சார்பில் உதய குமார் ஒரு கோலையும் கண்டி மாநகர சபை சார்பில் உமேஷ் ஒரு கோலையும் பெற்றதனால் போட்டி வெற்றி தோல்வியின்றி 1-1 என்ற அடிப்படையில் முடிவடைந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--