2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

மானிப்பாய் இந்து கல்லூரியின் நூற்றாண்டு விழாவையொட்டி உதைபந்தாட்ட போட்டிகள்

A.P.Mathan   / 2010 நவம்பர் 11 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவம்)

மானிப்பாய் இந்துக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவையொட்டி அழைக்கப்பட்ட யாழ். மாவட்ட முன்னணிப் பாடசாலை அணிகளுக்கு இடையேயான உதைபந்தாட்டப் போட்டிகள், விலகல் முறையில் மானிப்பாய் இந்து கல்லூரி மைதானத்தில் நாளை வெள்ளிக்கிழமை காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

மானிப்பாய் இந்துக் கல்லூரி அதிபர் எஸ்.சிவநேசன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வலிகாமம் கல்வி வலய கல்விப் பணிப்பாளர் ஆ.இராஜேந்திரனும் சிறப்பு விருந்தினர்களாக சண்டிலிப்பாய் கல்விக்கோட்ட கல்விப் பணிப்பாளர் சி.கந்தசுவாமி, பழைய மாணவனும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வைத்திய கலாநிதியுமான பி.என்.றொபின்சனும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இன்று இடம்பெறும் போட்டிகளில் மானிப்பாய் இந்துக் கல்லூரி, தெல்லிப்பளை யூனியன் கல்லூரி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, இளவாலை சென்.ஹென்றிஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி, நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், கொக்குவில் இந்துக் கல்லூரி, பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி, சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி ஆகியன பங்குபற்றவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .