Kogilavani / 2010 நவம்பர் 13 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவம்)
நாவலப்பிட்டியில் இடம் பெற்று வரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அகில இலங்கை ரீதியான மெய்வன்மைப் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைச் சேர்ந்த வடிவேற்கரசன் ஹரிகரன் தேசிய மட்டத்திலான சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.
19 வயதுப் பிரிவைச்சேர்ந்த இவர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 20 வயதுப்பிரிவினருக்கான தட்டெறிதல் போட்டியில் கலந்து கொண்டு 44.60 மீற்றர் தூரம் எறிந்து இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.
யாழ் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சார்பில் இவர் போட்டியில் கலந்து கொண்டார்.
2007 ஆம் ஆண்டு 37.57 மீற்றர் தூரம் ஏற்படுத்தப்பட்ட சாதனையை இந்தாண்டு ஹரிகரன் முறியடித்துள்ளார்.
இவர் கடந்த காலத்தில் தேசிய மட்டத்தில் பாடசாலை மட்டத்தில் இடம் பெற்ற போட்டிகளிலும் மற்றும் திறந்து போட்டிகளிலும் கலந்து கொண்டு பதக்கங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வவுனியா மாவட்டத்தின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அணியில் இடம் பெற்ற வீராங்கனை இராஜமனோகரன் தர்சினி 20 வயதுப் பிரிவினருக்கான குண்டெறிதல் போட்டியில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டுள்ளார்.
இவர் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் மாணவியவார்.
இவர் பாடசாலை மட்டத்தில், தேசிய மட்டத்தில் இடம் பெற்ற போட்டிகளிலும் பதக்கங்களை வென்றுள்ளதாக இவரின் பயிற்றுனர் விஜிதரன் தெரிவித்தார்.
43 minute ago
46 minute ago
50 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
46 minute ago
50 minute ago
55 minute ago