2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

திருகோணமலை மாவட்ட சமாதான விளையாட்டு போட்டி

Super User   / 2010 டிசெம்பர் 15 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

திருகோணமலை மாவட்டத்தில் மூவின மக்களிடையே சமாதானத்தையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் முகமாக விளையாட்டு போட்டி நிகழ்ச்சியொன்று எதிர்வரும் 25ஆம் திகதி ஆலங்கேணி விநாயகர் மகா வித்தியாலயத்தில் நடத்துவதப்படவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை ஒடிடபிள நிதியுதவியுடன் கிண்ணியா விஷன் மற்றும் இளைஞர் கழக மாவட்ட சம்மேளனம் ஆகியன இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

இம் மாவட்டத்திலிருந்து கிண்ணியா, தம்பலகாமம், கந்தளாய் மற்றும் சேருவில போன்ற பிரதேசங்களிலுள்ள 15 இளைஞர் கழகங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் இதில் பங்கேற்கவுள்ளனர்.

போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வெற்றியீட்டும் கழகங்களுக்கும் பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--