2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

சாரணர் சேவையினை பாராட்டி எம்.ஐ.எம்.முஸ்தபா கௌரவிப்பு

Kogilavani   / 2010 டிசெம்பர் 18 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)            

அக்கரைப்பற்று - கல்முனை மாவட்ட சாரணர் ஆணையாளரும் ஓய்வுபெற்ற அட்டாளைச்சேனை கல்வியியல் கல்லூரியின் உடற்கல்வித்துறை விரிவுரையாளருமான எம்.ஐ.எம்.முஸ்தபாவின் சாரணர் சேவையினை பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் நிகழ்வு தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

திருக்கோயில் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி என்.புள்ளநாயகம் தலைமையில் நடைபெற்ற சாரணர் பயிற்சிப் பாசறையின் போதே எம்.ஐ.எம்.முஸ்தபா இவ்வாறு பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி கணேசமூர்த்தி,  மாவட்ட சாரணர் தலைவர் எஸ்.எல்.முனாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--