Suganthini Ratnam / 2011 ஜனவரி 16 , மு.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கிரிசன்)
யாழ். மாவட்ட பிரதேச செயலகங்கள், உதவி அரசாங்க அதிபர் பிரிவு அணிகளுக்கிடையே இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் இடம்பெற்ற கிராமங்களை குறுக்கறுத்தோடும் போட்டி நவாலி மகாவித்தியால முன்றலிலிருந்து ஆரம்பமாகியது.ஆண்களுக்கு 12 கிலோமீற்றர் தூரம் வரையும் பெண்களுக்கு 8 கிலோமீற்றர் தூரம் வரையும் குறுக்கறுத்தோடும் போட்டிகள் இடம்பெற்றன.
ஆண்களுக்கான போட்டியில் முதலாம் இடத்தை மருங்கேணி உதவி அரசாங்க அதிபர் பிரிவைச் சேர்ந்த ரவி ரஜீகரனும், சிவரூபிகாந்தன் ஞானேஸ்வரனும் (நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபர் பிரிவு) மூன்றாம் இடத்தை மாயான் தினேஷ; (வேலனை பிரதேச செயலகம்) நான்காம் இடத்தை சதாசிவம் விஜயகுமார் (சங்கானை பிரதேச) செயலகம்) ஐந்தாம் இடத்தை செல்வரெட்னம் ஜெனகன் (வேலனை பிரதேச செயலகம்) ஆறாம் இடத்தை செல்வரெட்னம் ஜெயந்தன் (வேலனை பிரதேச செயலகம்) ஏழாம் இடத்தை ஜெகநாதன் வியாசன் (நல்லூர் பிரதேச செயலகம்) எட்டாம் இடத்தை சிவலிங்கமூர்த்தி கோகுலராஜ் (உடுவில் பிரதேச செயலகம்) ஒன்பதாம் இடத்தை கதிர்காம சோதி அமலன் (உடுவில் பிரதேச செயலகம்) பெற்றுக்கொண்டனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று காலை நவாலி மகாவித்தியாலய மண்டபத்தில் யாழ.; மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமதி ஜே.எப்.எ.ரூபசிங்கம் தலைமையில் நடைபெற்றது.
.jpg)
40 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
46 minute ago