2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

ஹெல்சிம் நிறுவனத்தின் வெற்றிக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் விளையாட இராணுவ அணி தகுதி

Suganthini Ratnam   / 2011 ஜூன் 12 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இலங்கை கால்பந்தாட்ட லீக் அணிகளுக்கிடையே இடம்பெற்ற ஹெல்சிம் நிறுவன வெற்றிக் கிண்ணத்திற்;கான கால்பந்தாட்டப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற இலங்கை இராணுவ அணி இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இலங்கை பொலிஸ் அணியும் இலங்கை இராணுவ அணியும் மோதிக்கொண்டன.

இலங்கை இராணுவ அணி 05க்கு 00 என்ற கோல் கணக்கில் பொலிஸ் அணியை வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றது.

பிரதம விருந்தினராக பாரம்பரிய மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் கே.என் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டதுடன் ஹொல்சிம் நிறுவன உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X