2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

வாகரை மஹா வித்தியாலயம் முதலாமிடம்

Menaka Mookandi   / 2011 ஜூன் 20 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

முதன்முறையாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 4 கல்வி வலயங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களிடையே நடத்தப்பட்ட பேண்ட் வாத்திய போட்டியில் 40 பாடசாலைகளுடன் மோதிய வாகரை மஹா வித்தியாலய மாணவர்கள் முதலாமிடத்தை சுவீகரித்துக்கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 4 வலயங்களையும் சேர்ந்த 8 பாடசாலைகள் மோதின. இதில் முதலாமிடத்தை வாகரை பாடசாலை பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர் எஸ்.சுகுமார் தெரிவித்தார்.

அமெரிக்க யு.எஸ்.எயிட் நிறுவன அனுசரணையுடன் நடாத்தப்பட்ட இப்போட்டியில் இரண்டாமிடத்தை பெரிய கல்லாறு மஹா வித்தியாலயம் பெற்றுக்கொண்டது. இறுதிநாள் நிகழ்வில் மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் திருமதி பவளகாந்தன் மற்றும் யு.எஸ்.எயிட் அதிகாரிகள் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X