2026 மே 01, வெள்ளிக்கிழமை

இரட்டையர் விழாவில் இலங்கை இரட்டையர்கள் பங்கேற்பு

Janu   / 2026 ஏப்ரல் 29 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் மோஜியாங் (Mojiang) நகரில் நடைபெறவுள்ள "உலகின் மிகப்பெரிய இரட்டையர் விழா - 2026" இல் பங்கேற்பதற்காக, இலங்கையை சேர்ந்த இரட்டையர்கள் குழுவினர் சீனா நோக்கி புறப்பட்டுள்ளனர்.

சுமார் 70 நாடுகளை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான இரட்டையர்கள் கலந்துகொள்ளும் இந்த விசேட விழா, வியாழக்கிழமை (30) முதல் மே 4ஆம் திகதி வரை  நடைபெறவுள்ளது.

இந்த விழாவில், இலங்கையின் தனித்துவத்தையும் அடையாளத்தையும் உலகிற்கு பறைசாற்றும் வகையில், இந்நாட்டிற்கே உரித்தான பாரம்பரிய நடனங்கள், பாடல்கள், கவிதைகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளை இலங்கைபிரதிநிதிகள் மேடையேற்ற உள்ளனர். இலங்கையின் கலாசார விழுமியங்களை சர்வதேச அரங்கில் பிரதிபலிக்கும் ஒரு முக்கிய வாய்ப்பாக இது பார்க்கப்படுகின்றது.

 டீ.கே.ஜி. கபில


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .