Editorial / 2026 மே 01 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்
“எதிரணி உறுப்பினர்கள் ஐந்து அல்லது பத்து பேர் வீதிக்கு இறங்குவதால் இந்த அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட முடியாது. இது மக்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கமாகும்; எனவே, அடுத்த பல வருடங்களுக்கு இதனை யாராலும் அசைக்க முடியாது,” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
மலையக மக்களுக்குரிய காணி மற்றும் வீட்டுரிமையைப் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு நிச்சயம் நிறைவேற்றப்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார்.
நுவரெலியாவில் இன்று (01) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:
“மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு வீடுகளை வழங்குவதற்குரிய பொறுப்பு எமக்கு உள்ளது. இவ்விடயத்தில் நிலவும் காணிப் பிரச்சினையைத் தீர்த்து, காணி மற்றும் வீட்டு உரிமைகளை முறையாகப் பெற்றுக்கொடுக்கும் அரசாங்கமாக ‘தேசிய மக்கள் சக்தி’ அரசாங்கம் திகழும்.
இந்த மண்ணில் பாட்டன் மற்றும் தாய்மார் உழைத்துக் கஷ்டப்பட்டனர். அவர்களின் பிள்ளைகள் அந்தச் சூழலில் இருந்து மீள்வதற்கு கல்வியே சிறந்த வழியாகும். அதற்குத் தேவையான வளங்களையும் வசதிகளையும் நாம் நிச்சயம் வழங்குவோம். குறிப்பாக, தமிழ் மொழிமூல ஆசிரியர்களுக்கு நிலவும் பற்றாக்குறை விரைவில் நிவர்த்தி செய்யப்படும்.
நாம் ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்களே ஆகின்றன. இந்த அரசாங்கத்தை அசைக்க முடியாது; ஏனெனில், மக்கள் அரசாங்கத்தின் பக்கம் நிற்கின்றனர். இந்நாட்டைப் படிப்படியாகக் கட்டியெழுப்புவதற்குரிய தெளிவான திட்டம் எம்மிடம் உள்ளது.
இந்நாட்டில் சட்டம் என்பது அனைவருக்கும் சமமானது. ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் அதிகளவில் சிறைக்குச் செல்லும் ஆண்டாக 2026-ஆம் ஆண்டு அமையக்கூடும்,” எனத் தெரிவித்தார்.








11 minute ago
16 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
16 minute ago
25 minute ago