2026 ஏப்ரல் 30, வியாழக்கிழமை

திருமணம் முடிக்காவிட்டால் இனி ’இலவங்கப்பட்டை’ அபிஷேகம் தான்

Janu   / 2026 ஏப்ரல் 30 , பி.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

உங்களது 25-வது பிறந்தநாள் அன்று நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, உங்களை ஒரு மின் கம்பத்தில் கட்டி வைத்து உடல் முழுவதும் இலவங்கப்பட்டை தூளை (Cinnamon Powder) கொட்டுவதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? டென்மார்க்கில் இது மிகவும் சாதாரணமான ஒரு விடயம். ஆனால், இந்த "தண்டனை" ஒருவர் 25 வயது வரையிலும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தால் மட்டுமே வழங்கப்படும்.

பாரம்பரியத்தின் வரலாறும் பின்னணியும்

அந் நாட்டு பாரம்பரியத்தின் படி, திருமணமாகாத ஆண்கள் "Pebersvend" (மிளகு மனிதன்) என்றும், பெண்கள் "Pebermø" (மிளகு கன்னி) என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

இந்த நடைமுறை பல நூற்றாண்டுகள் பழமையான வரலாற்றைக் கொண்டது. அக்காலத்தில் டென்மார்க் நறுமணப் பொருட்கள் (Spices) வர்த்தகத்திற்கு புகழ்பெற்றிருந்தது. வர்த்தகர்கள் அடிக்கடி பயணங்களை மேற்கொண்டதால் அவர்களுக்கு  திருமணம் செய்ய போதிய நேரம் கிடைக்கவில்லை. காலப்போக்கில், "நறுமணப் பொருட்கள்" மற்றும் "தனிமை வாழ்க்கை" ஆகியவற்றுக்கு இடையே ஒரு தொடர்பு உருவானது.

25 வயதாகியும் திருமணமாகாமல் இருந்தால் இலவங்கப்பட்டை தூள் தூவப்பட்டுள்ளது. ஒருவேளை 30 வயது வரை 'தனி ஒருவனாக' இருந்தால், இந்த வழக்கம் இன்னும் தீவிரமடைந்து மிளகுத்தூள் (Pepper) தூவும் நிலைக்கு செல்லப்பட்டுள்ளது.

தற்போது இந்த வழக்கம் மிகவும் பிரபலமடைந்துள்ளதால், கண்கள் மற்றும் மூக்கை பாதுகாப்பதற்கென விசேட கண்ணாடிகள் (Goggles) மற்றும் முகக் கவசங்கள் (Masks) அடங்கிய "இலவங்கப்பட்டை கருவூலங்கள்" (Cinnamon Kits) விற்பனை செய்யும் வணிகங்கள் கூட உருவாகியுள்ளன.

டென்மார்க் மக்கள் இதனை ஒருபோதும் அவமானமாக பார்ப்பதில்லை. இது வெறும் பிறந்தநாளை கொண்டாடுவதற்கும் நண்பர்களுடன் மகிழ்வதற்கும் செய்யப்படும் ஒரு சுவாரஸ்யமான செயலே ஆகும். நவீன உலகில் திருமணம் செய்து கொள்வது தாமதமாவது இயல்பான ஒன்று என்றாலும், இத்தகைய பாரம்பரியங்கள் மூலம் அவர்கள் தங்கள் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் மறக்காமல் முன்னெடுத்துச் செல்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .