2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

தடைதாண்டல் போட்டியில் வெள்ளிப்பதகம் பெற்ற மாணவன் கௌரவிப்பு

Kogilavani   / 2011 ஒக்டோபர் 11 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கஜன்)
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டியில் திருகோணமலை இராம கிருஷ்ண சங்கம் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மாணவன் றூமி வொசிம் இல்ஹாம் 21 வயதுக்குட்பட்ட 110 மீற்றர் தடைதாண்டல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார்.

இவரை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை கல்லூரியில் நடைபெற்றது.

இதனபோது, பாடசாலை அதிபர் இ.புவனேந்தரன் குறித்த மாணவனுக்கு பதக்கம் அணிவித்து  சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். பழைய  மாணவர் சங்கத்தின் உறுப்பினர் ஆர.கைலைவாசன் நினைவுப் பொருளினை வழங்கி வைத்தார்.

கடந்த 2000ஆம் ஆண்டு 15 வயத பிரிவில் ஆர்.கிசான்ரங்கா குண்டெறிதல் போட்டியில் தங்கப்பதக்கத்தையும்,  2002 ஆம் வருடம் ஜி.நிரஞசன் 19 வயது பிரிவில்  200 மீற்றர் போட்டியில் தங்கப்பதக்கத்தையும், 100 மீற்றர் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X