Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 ஒக்டோபர் 14 , மு.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(திஹாரிய அதீம் ஸுபைர்)
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் நடாத்தப்படுகின்ற பிறீமியர் லீக் கால்பந்தாட்ட சுற்றுத் தொடரின் 1ம் சுற்று போற்றி கடந்த 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ராஜகிரிய மொரகஸ்முல்ல விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இப்போட்டியில் திஹாரிய யூத் விளையாட்டு கழகமும் ராஜகிரிய மொரகஸ்முல்ல பிரமில் விளையாட்டுக் கழகமும் மோதிகொண்டன.
இப்போட்டியின் முதல் பாதியில் திஹாரிய யூத் விளையாட்டுக்கழகம் 1:0 என போட்டியை நிறைவு செய்தது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களை பெற்றுகொண்டனர். இறுதியில் போட்டியில் 3:2 என்ற புள்ளி வித்தியாசத்தில் திஹாரிய யூத் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது.
திஹாரய யூத் சார்பாக அனஸ், ருக்ஸான், யாஸர் ஆகியோர் தலா ஒரு கோல் வீதம் போட்டனர். இச்சுற்றுத் தொடரின் திஹாரிய யூத் விளையாட்டுக் கழகம் கலந்து கொள்ளும் இரண்டாம் சுற்றுப் போட்டி பிரமில் விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக நாளை சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு திம்பிரிகஸ்யாய விளையாட்டு மைதானத்தில் இடம் பெறவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .