2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கூடைப்பந்தாட்ட போட்டியில் மட்டு. மாவட்டம் முன்னிலை

Super User   / 2011 ஒக்டோபர் 22 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 23ஆவது தேசிய விளையாட்டு போட்டியின் கூடைப்பந்தாட்ட போட்டியில் மட்டக்களப்பு ஆண்கள் அணி இரண்டாமிடத்தையும் பெண்கள் அணி மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளன.

23 ஆவது தேசிய விளையாட்டு போட்டி ஹோமாகவில் இடம்பெறவுள்ள நிலையில் கூடைப்பந்தாட்ட போட்டி மகரகம இளைஞர் மத்திய நிலைய விளையாட்டரங்கில் கடந்த வாரம் இடம்பெற்றது.

ஆண்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டியில் குருநாகல் மாவட்டம் முதலாமிடத்தையும் மட்டக்களப்ப மாவட்டம் இரண்டாமிடத்தையும் காலி மாவட்டம் மூன்றாமிடத்தையும் பெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட மைக்கல் லைன் ஆண்கள் அணியே இரண்டாமிடத்தை பெற்றுள்ளதுடன் கிரான் பெண்கள் அணியினரே மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--