2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

கால்பந்தாட்ட போட்டியில் ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலயம் வெற்றி

Kogilavani   / 2012 நவம்பர் 09 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கு.சுரேன்)

உடுவில் கோட்டப் பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்தாட்ட போட்டியில் ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலயம் வெற்றிபெற்றது.

உடுவில் கோட்டப் பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்தாட்ட போட்டி சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

16 வயதுப் பிரிவினருக்கான இறுதிப் போட்டியில் ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலயமும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியும் மோதிக்கொண்டன.

இப்போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் ஸ்ரீ முருகன் அணி ஒரு கோலினைப் போட்டது. தொடர்ந்து இரண்டாவது பாதி ஆட்டத்திலும் மேலும் ஒரு கோலினை அவ்வணி போட்டது.

இரண்டாவது பாதி இறுதி நேரத்தில் ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணி பதில் கோலைப் போட்டது. அந்தக் கோலுடன் ஆட்டம் முடிவுக்கு வரவே 2:1 என்ற கோல் கணக்கில் ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலயம் வெற்றிபெற்றது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .