2025 ஜூலை 05, சனிக்கிழமை

கிரிக்கெட் போட்டியில் திருகோணமலை வேல்ஸ் கழகம் வெற்றி

Super User   / 2012 நவம்பர் 11 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}



(கஜன்)


ஆறாவது தடவையாக திருகோணமலை யங் ஒலிம்பிக்ஸ் கழகத்திற்கும் வேல்ஸ் கழகத்திற்கும் இடையிலான இன்றை கிரிக்கெட் போட்டியில் வேல்ஸ் கழகம் வெற்றி பெற்றது.

ஸ்ரீ கோணுஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய  யங் ஒலிம்பிக்ஸ் கழகம் நிர்ணயிக்கப்பட்ட 40 பந்த பரிமாற்றங்களில் சகல விக்கட்டக்களையும் இழந்து 145 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

146 என்ற  இலக்கினை வென்றால் வெற்றி என்ற  இலக்குடன் களம் இறங்கிய  வேல்ஸ் கழகம் 149 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுக் கொண்டது.

போட்டியின்  ஆட்ட நாயகனாக மூன்று ஆறு ஓட்டங்கள் மற்றும் ஆறு நான்கு ஓட்டங்கள் அடங்கலாக ஆட்டமிழக்காது 72 ஒட்டங்கள் பெற்ற சதீஸ்குமார் தெரிவு செய்யப்பட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .