2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

யாழ் மாணவர்களுக்கு ரக்பி பயிற்சி பட்டறை

Menaka Mookandi   / 2012 நவம்பர் 17 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)


பாடசாலை மாணவர்களுக்கான ரக்பி பயிற்சி பட்டறை இன்று சனிக்கிழமை யாழில் ஆரம்பமானது. யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகமும் சப்ரகமுவ ஸ்டேலியன்ஸ்; ஏற்பாட்டில் ரக்பி பயிற்சி பட்டறை ஆரம்பிக்கப்பட்டன.

கல்வி சிறந்த கல்விமான்களை உருவாக்குவது போல் விளையாட்டு ஆரோக்கியமான சமூதாயத்தினை உருவாக்கும் என்ற சிந்தனையின் மூலமும் மாணவர்களிடையே சிறந்த திறமையையும், ஆற்றலையும் வெளிப்படுத்தும் நோக்கத்துடன், யாழ். பாதுகாப்பு படைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்கவின் வேண்டு கோளுக்கு இணங்க இன்று சப்பிரகமுவ ஸ்டேலியன்ஸ் நிறுவனப் பணிப்பாளர் வர்ண டி சில்வாவினால் மாணவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

யாழ். மாவட்டத்தில் இருந்து, சென். புற்றிக்ஸ் கல்லூரி, சென். ஜோன்ஸ் கல்லூரி, யாழ். மத்திய கல்லூரி, சாவகச்சேரி இந்து கல்லூரி, மாதகல் சென் ஜோசப், மானிப்பாய் இந்து கல்லூரி, ஊர்காவற்துறை சென். ஆன்ரனிஸ் ஆகிய பாடசாலை மாணவர்கள் இப்பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டனர்.

புயிற்சிகளின் போது மாணவர்களுக்கு ரக்பி விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்படவுள்ளன. இந்நிகழ்வில், யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சியில் பங்கு பற்றிய மாணவர்களுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், யாழ். மாவட்ட பாடசாலை மாணவர்கள் ரக்பி விளையாட்டின் மூலம் 2013 ஆம் ஆண்டு யூன் மாதம் நடைபெறவுள்ள உலக கிண்ண போட்டியில் பங்கு பற்றி வெற்றியீட்ட வேண்டுமென்றும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .