2021 மே 10, திங்கட்கிழமை

வட மாகாண றக்பி பயிற்சியாளர்களுக்கான பயிற்சி

Super User   / 2012 டிசெம்பர் 10 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கு.சுரேன்)


இலங்கை றக்பி சங்கத்தின் ஏற்பாட்டில் வட மாகாண பயிற்சியாளர்களுக்கான பயிற்சி இன்று திங்கட்கிழமை சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது.

தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறவுள்ள இந்த பயிற்சி முகாமினை நெறிப்படுத்தி நடத்துவதற்காக, இலங்கை றக்பி அணியின் உதவி பயிற்றுனர் சனத் மார்ட்டீஸ், சர்வதேச றக்பி சபையின் இலங்கை போதனாசிரியர்களான நிகால் குணரட்ண, ஆனந்த கஸ்தூரியராச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இறுதி நாள் நிகழ்வு எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளதுடன் வட மாகாணத்திற்கான றக்பி விளையாட்டு சங்கமும் இதன்போது உருவாக்கப்படவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X