2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த கால்பந்தாட்டப் போட்டி

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 16 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ்)


கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகத்திற்கும் பிர்லியன்ட் விளையாட்டுக்கழத்திற்கு இடையில் இடம்;பெற்ற கால்பந்தாட்டப்போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது.

மருதமுனை ஈஸ்ட்டன் யூத் விளையாட்டுக்கழகத்தின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்ட கால்;பந்தாட்ட சங்கத்தால் நடத்தப்படுகின்ற 'மெரிகோல்ட் சுப்பர் லீக்' கால்;பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் ஒரு அங்கமாக நேற்று சனிக்கிழமை மேற்படி கழங்களுக்கு இடையில் இந்தப் போட்டி நடைபெற்றது.

இந்த நிலையில், 2 அணிகளும் எந்தவித கோல்களையும்  போடாத நிலையில் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது.

அம்பாறை மாவட்ட கால்;பந்தாட்டச் சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.ஐ.எம்.ஏ.மனாப்பின் அனுசரனையில் இடம்பெற்ற இந்தப் போட்டிக்கு அதிதியாக கல்முனை பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி வசந்த குமார கலந்துகொண்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .