2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

மாவனெல்லை கால்ப்பந்தாட்டச் சங்கத்தின் தலைவராக றஹ்மத்துல்லாஹ்

A.P.Mathan   / 2013 ஜூலை 20 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்
 
மாவனெல்லை கால்ப்பந்தாட்டச் சங்கத்தின் தலைவராக அல்ஹாஜ் காஸீம் றஹ்மத்துல்லாஹ் மீண்டும் தெரிவாகியுள்ளார்.
 
மாவனெல்லை கால்ப்பந்தாட்ட சங்கக் காரியாலயத்தில் இடம்பெற்ற வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் இவர் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார். 
 
மாவனெல்லைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கபில பண்டார, இலங்கை கால்ப்பந்தாட்ட சங்க மத்தியஸ்தர் சபை அங்கத்தவரான அல்ஹாஜ் டீன் உற்பட அண்மித்த பிரதேசங்களைச் சேர்ந்த கால்ப்பந்தாட்ட கழகங்களின் அங்கத்தவர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர். இத்தெரிவின்போது செயலாளராக டி.எஸ்.அஹமத் தீன் அவர்களும் தெரிவானார்.
 
இக் கூட்டத்தின் போது பங்குகொண்ட விளையாட்டுக் கழகங்களுக்கு கொழும்பு கால்ப்பந்தாட்டச் சங்கம் வழங்கிய கால்ப்பந்துகளும் அன்பளிப்புச் செய்யப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .