2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

கிரிக்கெட் போட்டியில் ஸ்பென்ஸ், நோமன்ஸ் கழகங்கள் வெற்றி

Suganthini Ratnam   / 2013 ஜூலை 23 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் லீக் முறையிலான சுற்றுப்போட்டியில் ஸ்பென்ஸ் கழகமும் நோமன்ஸ் கழகமும் வெற்றி பெற்றுள்ளன.

ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் 50 பந்துப்பரிமாற்றங்கள் கொண்டதாக இச்சுற்றுப்போட்டி நடத்தப்படுகின்றது. இதில் 14 கழகங்கள் 4 குழுக்களாக பங்குகொள்கின்றன.

நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் ஸ்பென்ஸ் கழகம் சைமண்ட்ஸ் கழகத்தை எதிர்த்து விளையாடியது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்பென்ஸ் கழகம்  42.4 பந்துப் பரிமாற்றங்களில்  சகல விக்கெட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.   ப.பிரதீபன் 54, கு.பிரசாத் 41 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர்.

பந்துவீச்சில் சைமண்ட்ஸ் கழகம் சார்பில்  பௌமி  10 ஓவர்கள் 46 ஓட்டங்களுக்கு  3 விக்கெட்டுக்கள் ஜெயதீபன்  4 ஓவர் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களையும் பெற்றுக் கொண்டனர்

பதிலுக்கு களம் புகுந்த சைமண்டஸ் அணியினர்  23.1 பந்துப் பரிமாற்றங்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து  70 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர். பிரசாத் 20, சதீஸ் 16 ஓட்டங்களை பெற்றனர்.  பந்து வீச்சில் ஸ்பென்ஸ் கழகம் சார்பில்  மதன் 7 ஓவர் 10 ஓட்டங்கள்; 4 விக்கெட்டுக்கள்,  தீபன் 4 ஓவர்கள்  04 ஓட்டங்கள்,   2 விக்கட்கெட்டுக்களை பெற்றுக் கொண்டனர்.

இதன் மூலம் ஸ்பென்ஸ் கழகம்  179 ஓட்டங்களால் சைமண்டஸ் கழகத்தை வெற்றி கொண்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .