2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

சோடியாக் கழகம் இரண்டு விக்கெட்டுக்களால் வெற்றி

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 05 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் கிரிக்கெட் சுறறுப் போட்டியில் சோடியாக் கழகம் 2 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.

இரண்டாவது கால் இறுதி ஆட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. 

நாணயச் சுழங்றியில் வெற்றிபெற்ற வேல்ஸ் விளையாட்டுக் கழகம்  47.3 பந்து பரிமாற்றங்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 214 ஓட்டங்களைப் பெற்றுகொண்டது.

இவ் அணி சார்பாக கெ.சதீஸ்குமார் 69,  மகேஸ்வரன் 51,  ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் சோடியக் கழகத்தின் சார்பில்  சுபுன்  7 ஓட்டங்களுக்கு  3 விக்கட்டுக்களையும் லசிந்து  32 ஓட்டங்களுக்கு  2 விக்கெட்டுக்களையும்,  சஞ்ஜீவ 16 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டினையும் பெற்றுகொண்டனர்.

215 என்ற இலக்குடன் களம் புகுந்த சோடியாக் விளையாட்டுக் கழகம் 43.4 பந்துபரிமாற்றங்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 215 ஓட்டங்களை பெற்றது.

லசிந்து ஆட்டம் இழக்காமல்  73,  இந்திக 26, ஜேகாசித  14, சின்னா 18, சுபன் 16 ஓட்டங்கள் பெற்றனர்.

பந்து வீச்சில் வேல்ஸ் கழகத்தன் சார்பில்  சி.பிரதீபன்  44 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களையும்.  எம்.அஸ்லம் 35 ஓட்டங்களுக்கு 2விக்கட்டுக்கயும்,  வி.தேவவிதுரன் 43 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களையும் பெற்றர்.

இதன் மூலம் சோடியாக் விளையாட்டுக் கழகம் 2 விக்கெட்டுக்களால்; வெற்றிபெற்று அரையிறுத்திக்கு தெரிவாகி உள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--