2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் பென்ஜா- கிசோக் சம்பியன்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 23 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரி.எல்.ஜவ்பர்கான், தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட இடைவெளிக்குப்பின்னர் நடாத்தப்பட்ட பூப்பந்து சுற்றுப்போட்டியில் தனிநபர் போட்டித் தொடரில் சி.சீலனும் இரட்டையர் ஆட்டத்தில் பென்ஜா மற்றும் கிஸோக் ஆகியோரும்; சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டனர்.

ஆரையம்பதி ஏசியன் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த பூப்பந்து சுற்றுப்போட்டி ஆரையம்பதி பூப்பந்து அரங்கில் மூன்று தினங்கள் நடைபெற்றது.

தனிநபர் மற்றும் இரட்டையர் ஆட்டங்களில் மொத்தம் 42 போட்டிகள் இடம்பெற்றன.

தனிநபர் ஆட்டத்தில் இறுதிப்போட்டியில் சீலன் மற்றும் ரமணன் ஆகியோர் மோதிக்கொண்டனர். இதில் 2:0 என்ற அடிப்படையில் சீலன் வெற்றிபெற்றார்.

இரட்டையர் ஆட்டத்தில் பென்ஜா மற்றும் கிசோக் ஆகியோர் சீலன் மற்றும் வரதன் ஆகியோருடன் மோதிக்கொண்டனர்.
இதில் பென்ஜா—கிசோக் ஆகியோர் வெற்றிபெற்று சாம்பியன் கிண்ணத்தை தட்டிக்கொண்டனர்.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு அதிகாரி கே.ஈஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு விருதுகளை வழங்கி வைத்தார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--