2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

சைக்கிள் ஓட்டப் போட்டி வவுனியாவை வந்தடைந்தது

Kogilavani   / 2014 ஏப்ரல் 02 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


தேசிய இளைஞர் மாநாட்டுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கோடு யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட சைக்கிள் ஓட்டம்  புதன்கிழமை (2) வவுனியாவை வந்தடைந்தது.

யாழ். அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தினால் யாழ்ப்பாணத்தில் புதன்கிழமை (2) காலை 8.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்ட இச் சைக்கிள் ஓட்டப்போட்டியை,  இளைஞர் சேவைகள் மன்றம், இளைஞர் விவகார திறன் விருத்தி அமைச்சு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிலையில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய முன்றலை மதியம் வந்தடைந்த இச் சைக்கிள் ஓட்டமானது, வவுனியா அரசாங்க அதிபரினால் நிறைவு செய்யப்பட்டிருந்தது.

125இற்கு மேற்பட்டவர்கள் பங்குபற்றியிருந்த சைக்கிள் ஓட்டமானது, நாளை காலை வவுனியாவில் இருந்து ஆரம்பமாகி இரண்டு நாட்களில் கொழும்பை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .