2021 மார்ச் 04, வியாழக்கிழமை

கிழக்கு மாகாண பெண் சாரணிய பாசறை

Kogilavani   / 2014 ஏப்ரல் 07 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன்


கிழக்கு மாகாண பெண்கள் சாரணியத்தினரின் மூன்றுநாள் பயிற்சி பாசறையின் இறுதி நாள் நிகழ்வு  ஞாயிற்றுக்கிழமை இரவு மட்டக்களப்பு நாவலடி நாமகள் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. 

மூன்றுநாள் பாசறையின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு  பாசறைதத்தீ இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக் கல்வி பணிப்பாளர், வலயக் கல்வி அலுவலர்கள் தாழங்குடா தேசியக் கல்வியற் கல்லூரி பீடாதிபதி, உபபீடாதிபதி, அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றார்கள், பெண் சாரணிய மாணவிகள் பாசறை அனுமதிப் பத்திரம் வழங்கும் அதிகாரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இப்பாசறையில் மட்/வின்சன்ட் மகளிர் வித்தியாலயம், மட் /சிசிலியா பெண்கள் வித்தியாலயம், மட்/கல்லடி விவேகானந்த மகளிர் மகாவித்தியாலயம், மட் /ஊறனி சரஸ்வதி வித்தியாலயம், மட்/ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயம், மட்/அமிர்தகழி சித்திவிநாயகர் வித்தியாலயம், மட்/ மயிலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலயம் ,மட் /மயிலம்பாவெளி விபுலானந்தா வித்தியாலயம், மட்/ தளவாய் விக்னேஸ்வரா வித்தியாலயம், மட்/ களுவங்கேணி விவேகானந்த வித்தியாலயம், மட்/மகாஜன கல்லூரி ஆகிய பாடசாலைகளின் பெண் சாரணிய மாணவிகள் பங்குபற்றினர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .