2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

சம்பியன் கிண்ணத்தை வென்றது யங்கொமைனி

Super User   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா

பொத்துவில் பசறிச்சேனை யங்கொமைனி விளையாட்டுக்க கழகத்தின் 33ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்பட்ட யங் கொமைனி வெற்றிக்கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் யங்கொமைனி விளையாட்டுக்கழகம் சம்பியன் கிண்ணத்தை வெற்றி கொண்டது.

பசறிச்சேனை மைதானத்தில் திங்கட்கிழமை (14) கழகத்தின் தலைவர் ஏ.பி.சதக்கத்துல்லா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்ததுடன் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ்.எம்.வாஸித் கௌரவ அதிதியாகவும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஏ.பதுர்காண் விசேட அதிதியாகவும், சுற்றுலா, கைத்தொழில் சம்மேளனத் தலைவர் ஏ.எம்.ஜவ்பர் மற்றும் முன்னாள் கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.எல்.எம்.ஏ.காதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

33ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் பொத்துவில் பிரதேசத்திலுள்ள பிரபல்லியமிக்க 12 முன்னணிக் கழகங்கள் கலந்து கொண்டதுடன் இறுதிப் போட்டியில் பொத்துவில் அறுகம்பையைச் சேர்ந்த அல்-அக்ஜா விளையாட்டுக் கழகமும் பசறிச்சேனை யங்கொமைனி விளையாட்டுக் கழகமும் மோதிக் கொண்டன. இதன் போது மூன்றுக்கு புச்சியம் என்ற கோல் கணக்கில் கொமைனி விளையாட்டுக் கழகம் சம்பியனானது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--