2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

AI ஆபாச அத்துமீறல்கள் தொடர்கின்றன

Janu   / 2025 டிசெம்பர் 18 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏஐ தொழில்நுட்பம் மூலம் தொடர்ச்சியாக நடிகைகளைக் கவர்ச்சியாக சித்திரித்து வருகின்றனர்.

சமூக வலைதளப் பயனராக ஒருவர் இன்று இல்லையென்றால் அவருக்கும் உலகிற்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்பதுபோல் ஆகிவிட்டது. நம்முடைய ஒவ்வொரு நொடிகளையும் தீர்மானிக்க வல்லவையாக இணையப் பயன்பாடு பெருகிவிட்ட நேரத்தில் அதனால் பல சாதகங்கள் இருந்தாலும் முகம் சுளிக்க வைக்கும் மோசமான விஷயங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

தற்போது, அதில் முன்னணி வகிப்பது ஏஐ தொழில்நுட்பம்தான். இறந்தவரை உயிருடன் இருப்பதுபோல் மாற்றுவது, பழைய புகைப்படங்களுடன் இன்றைய தோற்றத்தைப் பொறுத்துவது, டீ ஏஜிங் செய்து நம் பழைய காலத்தைத் திரும்பிப் பார்ப்பது என மனதிற்கு மகிழ்ச்சியூட்டும் பல கட்டளைக் கருவிகள் இருந்தும் சிலர் நடிகைகளின் புகைப்படங்களை உண்மைக்கு நெருக்கமாக மிக கவர்ச்சியாக மாற்றி சமூக வலைதளங்களில் அதனை பகிரும் போக்கு அதிகரித்து வருகிறது.

போட்டோஷாஃப் காலத்தில் தலையை மட்டும் ஒட்டி வைக்கும் ஜால வேலைகள் எளிதாகக் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், ஏஐ 99% துல்லியமாக இருப்பதால் எது உண்மை, எது போலி என்பதை நீண்ட யோசனைக்குப் பின்பே அடையாளம் காண முடிகிறது.

சமூக வலைதளப் பயனர்களுக்கு இதனால் பெரிய ஆபத்துக்கள் இல்லையென்று சொல்லிவிட முடியாது. நடிகைகளை மிக கவர்ச்சியாக மாற்றினால் அவர்களின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் இப்படியான புகைப்படம் இருக்கிறதா என பார்த்து முடிவுக்கு வரலாம்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X