2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

சதுரங்க சுற்றுப் போட்டி

Kanagaraj   / 2014 ஏப்ரல் 25 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


- சுமித்தி தங்கராசா


வடமாகாண ஆளுநர் செயலத்தினால் நடாத்தப்பட்ட வடமாகாண ஆளுநர் சதுரங்கச் சுற்றுப்போட்டி கடந்த 23 ஆம் 24 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி, குமாரசுவாமி மண்டபத்தில் நடைபெற்றது.

12,14,16வயதுப் பிரிவுகளைச் சேர்ந்த இருபாலாருக்குமாக நடைபெற்ற இந்த சுற்றுப்போட்டியில் வடமாகாணத்திலிருந்து 3000 சதுரங்கப் போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இவர்களிலிருந்து ஒவ்வொரு வயதுப்பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு பரிசில்களும் கேடயங்களும் நேற்று(24) மாலை வழங்கப்பட்டன.

வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, வடமாகாணப் பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், இலங்கை சதுரங்க கழகத்தின் உறுப்பினர்கள், வடமாகாண சதுரங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--