George / 2015 பெப்ரவரி 10 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்
கரவெட்டி பிரதேச இளைஞர் விளையாட்டு கழகங்களுக்கிடையில் நடைபெற்று வரும் விளையாட்டு நிகழ்வில், பெண்களுக்கான மென்பந்தாட்ட கிரிக்கெட் போட்டியில் வதிரி டயமன்ஸ் அணி சம்பியனாகியது.
கரவெட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 6 அணிகள் பங்குபற்றிய இந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி அணிக்கு 6 பேர் 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக இமையாணன் விளையாட்டுக்கழக மைதானத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை (08) நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் அல்வாய் மனோகரா அணியும் வதிரி டயமன்ஸ் அணியும் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மனோகரா அணி முதலில் துடுப்பெடுத்தாடி, 5 ஓவர்களில் 43 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டயமன்ஸ் அணி, 4.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
55 minute ago
3 hours ago
27 Feb 2026
27 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
3 hours ago
27 Feb 2026
27 Feb 2026