Kogilavani / 2011 ஜூலை 14 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் நடத்தும் 7ஆவது வருட விளையாட்டு போட்டி எதிர்வரும் 1 ஆம் திகதி திருகோணமலை மெக்கெய்சர் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இத்றகான அனுமதியினை கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம் வழங்கி உள்ளார்.
இவ்விளையாட்டுப் போட்டியில் 16, 18, 20 வயதுகுட்பட்ட ஆண் பெண் இருபாலருக்குமான போட்டிகள் இடம்பெறவுள்ளன.
இதேவேளை விளையாட்டுக் கழகங்களுக்கான விண்ணப்பங்களை உடன் அனுப்பி வைக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு கடிதம்மூலம் திருகோணமலை கிளை நிறைவேற்று அதிகாரி கோரியுள்ளார்.
இப்போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள தேசிய மட்ட போட்டிகளில் பங்கு பெறும்; வாய்ப்பினை பெற்றுக் கொள்வார்கள்.
3 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago