Editorial / 2019 ஏப்ரல் 21 , பி.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கே. கண்ணன்

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்குட்பட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான மாவட்ட மட்டப் பெண்களுக்கான எல்லே தொடரில் கோப்பாய் பிரதேச செயலகம் சம்பியனாகியது.
அராலி மாவத்தை விளையாட்டுக் கழக மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில் சங்கானை பிரதேச செயலகத்தை வென்றே கோப்பாய் பிரதேச செயலகம் சம்பியனாகியிருந்தது.

குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சங்கானை பிரதேச செயலகமானது ரஜிதா பெற்ற இரண்டு ஓட்டங்களுடன் 50 பந்துகளில் இரண்டு ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
பதிலுக்கு, மூன்று ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய கோப்பாய் பிரதேச செயலகம் 14 பந்துகளில் வெற்றியிலக்கையடைந்தது. கோப்பாய் பிரதேச செயலகம் சார்பாக, நிரோஜினி இரண்டு ஓட்டங்களையும், கஜானி ஓர் ஓட்டத்தையும் பெற்றிருந்தனர்.
47 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago