2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

சம்பியனான லிவர்பூல் வைட்

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 10 , பி.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம். சனூன்

புத்தளம் லிவர்பூல் கால்பந்தாட்டக் கழகம் நடாத்திய அதன் அங்கத்தவர்களுக்கிடையிலான அணிக்கு ஏழு பேர்களை கொண்ட கழகத்துக்கிடையிலான கால்பந்தாட்டத் தொடர் 2021 எனும் தொடரிலேயே லிவர்பூல் வைட் அணியினர் சம்பியனாகியுள்ளது.

புத்தளம் இபுனு பதூதா வீதியில் அமைந்துள்ள கால்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற இந்த தொடரில் லிவர்பூல் கழகத்தின் வீரர்களை உள்ளடக்கிய யெலோ, ப்ளூ, றெட், வைட் ஆகிய நான்கு அணிகள் பங்கேற்றன.

புள்ளிகள் அடிப்படையில் நடைபெற்ற இந்த போட்டித்தொடரில் அதி கூடிய புள்ளிகளை பெற்ற லிவர்பூல் வைட், றெட் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடாத்தி 2-0 என்ற கோல் கணக்கில் வைட் சம்பியனாகியது.

இத்தொடரின் சகல போட்டிகளுக்கும் மத்தியஸ்தராக எம்.எஸ்.எம். நௌபி கடமையாற்றினார். சிறந்த வீரர்களாக ரஸ்வான், தஸ்லீம், நசீம் ஆகியோர் தெரிவாகினர். 

இறுதிப் போட்டியில், அதிதிகளாக புத்தளம் நகர சபை உறுப்பினர் பீ.எம். ரனீஸ், புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் முஹம்மது ரிபாய் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .