2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

சம்பியனானது அரசடித்தீவு விக்னேஸ்வரா வி.க

Gopikrishna Kanagalingam   / 2016 ஜூலை 10 , பி.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு முதலைக்குடா விளையாட்டுக் கழகத்தின் 55ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்பட்ட கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில், பெனால்டி மூலம் அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்று, முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது.

இத்தொடரில் 24 விளையாட்டுக் கழகங்கள் பங்கேற்று இறுதிச் சுற்றுக்கு முதலைக்குடா விளையாட்டுக் கழகமும் அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகமும் தெரிவாகியிருந்தன. 

இக்கால்பந்தாட்டப் போட்டியின் இறுதி நிகழ்வின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம், மற்றும் பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர், பாடசாலைகளின்  அதிபர்கள், கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .