2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

போட்டிக்கு தயாராகும் Dambulla Viiking

Editorial   / 2020 நவம்பர் 22 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த மாதம் 26ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் ஆரம்பமாகவுள்ள லங்கா பிரிமியர் லீக் (LPL ) போட்டிகளில் விளையாடவுள்ள தம்புள்ளை வைக்கிங் (  Dambulla Viiking ) அணி அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

இந்த அணியின் தலைமை பயிற்சிவிப்பாளரான ஓவைஸ் ஸா ஹம்பாந்தோட்டையிலுள்ள ஷங்ரிலா ஹோட்டலில் சுயதனிமையில் இருந்து வரும் நிலையில், அவரது அணி குறித்து இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.


எம்மிடம் உள்ளுர் மற்றும் சர்வதேச வீரர்கள் என அனுபவம் வாய்ந்த கலப்பு அணியாகவுள்ளது. நான் அவர்களுடன் நெருக்கமாக பணியாற்றி, அணியின் வெற்றிக்கு வழிகாட்டுவேன் என தெரிவித்துள்ளார்.

அத்துடன், சில தரமான உள்ளுர் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் எல்.பி.எல் இன் ஏனைய அணிகளில் விளையாடுவதால், இது தரமான கடுமையான போட்டிகளையுடைய சவால் மிக்க போட்டியாக இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தம்புள்ளை வைக்கிங் அணியின் தலைவர் யார் என்பது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள அவர், பலரது அபிப்ராயங்கள் தலைவர் தெரிவில் இருப்பதாகவும் எனினும் அணியின் தலைவர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கு முன்னர், எமது அணி வீரர்களுடன் 2 பயிற்சிப் போட்டிகளை நடத்தவுள்ளதாகவும் இந்த அணியின் தலைமை பயிற்சிவிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் தம்புள்ளை வைக்கிங் அணியில் இலங்கை வீரர்களுடன் இங்கிலாந்தைச் சேர்ந்த சமித் பட்டேல்,எஸ்.ஷpன்வாரி-ஆப்கானிஸ்தான், சுதீப் தியாகி-இந்தியா, அன்வர் அலி- பாகிஸ்தான், போல் ஸ்ட்ரேலிங்-அயர்லாந்து, அப்தாப் அலாம்- ஆப்கானிஸ்தான் ஆகிய வெளிநாட்டு வீரர்களும் விளையாடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .