Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 27 , மு.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
அகில இலங்கை கால்பந்தாட்டச் சங்கம் நடத்திய பிரிமியர் லீக் டிவிசன் 2 கால்பந்தாட்ட இறுதிப்போட்டியில் கல்முனை பிரிலியன்ட் விளையாட்டுக் கழகம் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு சீ.ஆர்.அன்ட் எப்.ஸி மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப்போட்டியின்போது களுத்துறை சுப்பர்பீச் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்தாடிய கல்முனை பிரிலியன்ட் விளையாட்டுக்கழகம் 5 – 4 என்ற கோல் அடிப்படையில் வெற்றிபெற்றது.
பிரிலியன்ட் விளையாட்டுக்கழகம் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டதுடன,; பிரிமியர் லீக் வெற்றிக்கிண்ணமும் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டன.
அம்பாறை மாவட்ட கால்பந்தாட்டத்துறை வரலாற்றில் கல்முனையைச் சேர்ந்த விளையாட்டுக்கழகமொன்று தேசிய ரீதியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது இதுவே முதன்முறையாகும்.
23 Oct 2025
23 Oct 2025
Nafar Saturday, 06 November 2010 08:44 PM
மிகவும் பெருமையாக இருக்கிறது. கல்முனை பிரிலியன் இற்கு நன்றிகள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Oct 2025
23 Oct 2025