2021 மார்ச் 08, திங்கட்கிழமை

மட். கால்பந்தாட்ட பெண்கள் அணிக்கு பயிற்சி

Super User   / 2014 ஜூலை 02 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஜுலை மாதம் 4ஆம், 5ஆம், 6ஆம் திகதிகளில்  நடைபெறவுள்ள தேசிய விளையாட்டுப் போட்டியின், பெண்களுக்கான கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் பங்கு பங்குபற்றவுள்ள மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அணி தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் இவ் அணியினருக்கான கால்பந்தாட்ட பயிற்சி முகாம் கடந்த ஒரு வாரகாலமாக கொக்கட்டிச்சோலை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இம் மாகாண மட்ட கால்பந்தாட்ட அணியினருக்கான பயிற்சி முகாமின் ஆரம்ப  வைபவத்தில் கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர் திரு.மதிவண்ணன், மாகாண விளையாட்டுத்துறை அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் கால்தைபந்தாட்ட அணி, கிழக்கு மாகாண விளையாட்டு அமைச்சினால் இம்முறை நடாத்தப்பட்ட  மாவட்ட, மாகாண கால்பந்தாட்ட போட்டிகளிலும் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது போன்றே கடந்த பல வருடங்களாக பெண்கள் உதைபந்தாட்ட அணியினர் தேசிய போட்டிகளுக்கு தெரிவாகி தமது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார்கள்.

பெண்கள் அணியின் பொறுப்பாசிரியராக எம்.ஜீவரட்னம் கடமையாற்றி வருகின்றார். தேசிய போட்டியில் பங்கு பற்றவுள்ள இவ் அணிக்கான பயிற்சிகளை தென்கிழக்குப் பல்கலைக்கழக உடற்கல்விப் பிரிவு பொறுப்பாளரும் இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்றுவிப்பாளருமான எம்.எல்.ஏ.தாஹிர் வழங்கி வருகின்றார்.

இப்பயிற்சி முகாமானது மாவட்ட விளையாட்டு அதிகாரி வீ.ஈஸ்வரன் மற்றும் பிரதேச விளையாட்டு அதிகாரி கே.நிலக்ஷன் ஆகியோரின் நெறிப்படுத்தலில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .