2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

முன்னேஸ்வரம் காளி கோயிலில் மிருக பலி பூசைக்கு எதிராக சத்தியாக்கிரகப் போராட்டம்

Super User   / 2010 ஓகஸ்ட் 23 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மும்தாஜ்)

சிலாபம், முன்னேஸ்வரம் காளி கோவிலில் நாளை நடைபெறவுள்ள மிருக பலியை தடுப்பதற்காக சத்தியாக்கிரக போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தேசிய பிக்கு முன்னணியினர்  எச்சரிக்கை விடுத்துள்ளனனர். alt

சிலாபம், முன்னேஸ்வரம் காளி கோயிலில் நாளை நடைபெறவுள்ள மிருக பலிப் பூசையினைத் தடுத்து நிறுத்த சிலாபம் பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவ்வாறு பொலிஸார் இந்நடவடிக்கையினை தடுத்து நிறுத்தாது போனால் நாளைய தினம் தேசிய பிக்கு முன்னணியின் பிக்குகள், ஹிந்து மதகுருமார்கள் மற்றும் சமூக அமைப்புக்களின் உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் முன்னேஸ்வரம் காளி கோயிலின் முன்னாள் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தப் போவதாகவும் தேசிய பிக்கு முன்னணியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் பாண்டிருப்புவே வினீத தேரர் தெரிவித்தார்.

இந்த மிருக பலி பூசையினை நிறுத்துமாறு சிலாபம் பொலிஸில் இவர் முறைப்பாடு செய்துள்ளார் என சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். இவ்விடயம் தொடர்பில் விசாரணை செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியங்கள் பற்றி ஆராய்ந்து வருவதாக சிலாபம் பிரதேச பொலிஸ் அதிகாரி சீ. ஈ. வெத்தசிங்க தெரிவித்தார்.

300 ஆடுகளும் பெருந்தொகையான கோழிகளும் நாளைய தினம் காளி கோயிலில் பலி கொடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .