2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வடக்கின் கடல்வளம் அழிவடைவதை தடுக்க டெசோ மாநாட்டில் வலியுறுத்த தீர்மானம்: தேசிய மீனவர் ஒத்துழைப்பு இய

Kogilavani   / 2012 ஜூலை 19 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல்)

இந்திய மீன்பிடி இழுவைப் படகுகளிலிருந்து அத்துமீறிய தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதன் காரணமாக இலங்கையின் வடபகுதி கடல்வளம் அழிக்கப்படுவதை தடுக்கும் தீர்மானம் ஒன்றை தி.மு.க வின் 'டெசோ' மாநாட்டின் போது கொண்டு வருவதற்கு தென்பகுதி தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் வடபகுதி கடற்றொழில் கூட்டமைப்பு என்பன இணைந்து நடவடிக்கை எடுக்கவுள்ளது.

இந்திய மீன்பிடி இழுவைப் படகுகளின் தொழில் நடவடிக்கை காரணமாக அழிக்கப்படும் வடபகுதிக் கடல்வள அழிவைத் தடுக்கும் வழிவகைகளை ஆராயும் கருத்தரங்கு ஒன்று யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தைச் சேர்ந்த தேவதாசன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் வடபகுதி மீனவர்களின் இழுவைப் படகுத்தொழில், இந்திய இழுவைப் படகுத்தொழில் பிரச்சினைகள் பல்வேறு கோணங்களில் ஆராயப்பட்டதுடன் இதனைத் தீர்த்து வைப்பதற்கான பதினெட்டுத் தீர்மானங்களும் முன்மொழியப்பட்டுள்ளன.

இந்திய மினவர்களது பிரச்சனையை தி.மு.க வின் டெசோ மாநாட்டிற்கு எடுத்துச்செல்லல், சாத்வீக போராட்டத்தை நடத்துதல், மீனவர்களுக்கான விழிப்புணர்வூட்டல், சகல தரப்பினையும் இணைத்து பொது அமைப்பு ஒன்றின் மூலம் நடவடிக்கை எடுத்தல், இந்திய இழுவைப் படகுகளைத் தடை செய்யும்முன் உள்ளூர் மீனவர்கள் இழுவைப் படகுத் தொழிலைத் தடைசெயதல், ஏனைய மாவட்ட மீனவர்களையும் இணைத்து நடவடிக்கை மேற்கொள்ளல், தென்னிந்திய நடிகர்களையும் இணைத்து இந்த விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொள்ளல், இந்திய மீனவர்கள் பிரச்சனையில் பராமுகமாக இருந்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழுத்தம் கொடுத்தல், இந்தியப் பத்திரிகையாளர்களை வரவழைத்து எமது பகுதி மீனவர் பிரச்சனைகளை தெளிவுபடுத்தல், சர்வதேச தொழில் சங்கத்திற்கு இந்தப் பிரச்சனையை எடுத்துச் செல்லல் உட்பட 18 தீர்மானங்கள் இந்தக் கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இவை குறித்து தீர்க்கமான முடிவுகள் அடுத்த தேசிய மீனவர் ஒத்துழைப்பு சங்கத்தின் கூட்டத்தில் அறிவிக்கப்படவுள்ளது.

மேலும் இந்தக் கருத்தரங்கில் யாழ். கடற்றொழில் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.தவரட்ணம், அருட்தந்தையர்கள், இந்து மதகுரு, கடற்றொழிலாளர்கள், கூட்டுறவுச்சங்கப் பிரதிநிதிகள், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X