2021 மார்ச் 03, புதன்கிழமை

'இஸ்லாமிய சமூக நீதியையும் மற்றும் பால்நிலை சமத்துவத்தையும் மேம்படுத்தல்' நூல் வெளியீடு

Kogilavani   / 2012 நவம்பர் 11 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியினால் தயாரிக்கப்பட்ட 'இஸ்லாமிய சமூக நீதியையும் மற்றும் பால்நிலை சமத்துவத்தையும் மேம்படுத்தல்' எனும் நூல் வெளியீட்டு விழா இன்று காலை சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

முன்னணியின் இணைப்பாளர் எம்.எஸ்.ஜலீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், இப்பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் உள்ளிட்ட முன்னணியின் திட்ட உத்தியோஸ்தர்களான லைலா உடையார், நதீரா சாலிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நூலினை அட்டாளைச்சேனை கல்வியல் கல்லூரி இஸ்லாமிய கற்கை நெறிகளுக்கான தலைவர் எம்.ஐ.ஜவ்பர், விரிவுரையாளர்களான
ஏ.எல்.நாசிர்கனி மௌலவி, எப்.எம்.ஏ.அன்சார் மௌலானா, இஸட்.தஸ்லிம் மற்றும் கல்முனை கல்வி வலய உதவிக் கல்வி பணிப்பாளர் இஸட். ஏ.நதீர் மௌலவி ஆகியோர் தொகுத்துள்ளனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .