2021 மே 06, வியாழக்கிழமை

'உள்ளதும் நல்லதும்' நூல் வெளியீட்டு விழா

Sudharshini   / 2015 நவம்பர் 21 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல்-சக்திவேல்   

புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளையின் 37ஆவது நினைவு தின நிகழ்வையொட்டி, 'உள்ளதும் நல்லதும்'; என்ற நூல் வெளியீட்டு விழா மட்டக்களப்பு குருக்களகள்மடம் கலைவாணி மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில்,  வரவேற்புரையியை அ.விக்னேஸ்வரனும் தொடக்கவுரையை குருக்கள்மடம் கலைவாணி மகாவித்தியாலய அதிபர் க.செல்வராசாவும், நூல் அறிமுக உரையினை கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் திருமதி ரூபி வலன்ரினா பிரான்ஸிஸூம், நன்றியுரையினை புலவர்மணி பெரியதம்திப்பிள்ளையின் நினைவுப் பணிமன்றத்தின் செயலாளர் பெ.சத்தியலிங்கமும் நிகழ்த்தினர்.

நூலின் முதற் பிரதியினை புலவர்மணி பெரியதம்திப்பிள்ளையின் நினைவுப் பணிமன்றத்தின் தலைவரிடமிருந்து யாழ்.பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலைப் தமிழ்த்துறைப் பேராசிரியர்  எஸ்.சிவலிங்கராசா பெற்றுக்கொண்டார்.

புலவர்மணி பெரியதம்திப்பிள்ளையின் நினைவுப் பணிமன்றத்தின் தலைவர் சி.சந்திரதேசகரம் தலைமையில் நடைபெற்ற இந்நிந்நிகழ்வில், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் மு.கோபாலரெத்தினம், யாழ். பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலைப் தமிழ்த்துறைப் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராசா உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .