2021 மார்ச் 03, புதன்கிழமை

தேன் மழை சிறப்பு நிகழ்ச்சி

Niroshini   / 2016 மே 24 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பி.எம்.எம்.ஏ.காதர்

சம்மாந்துறை சமூக கலாசார கல்வி மற்றும் சமாதான  நண்பர்கள் அமைப்பின்  'தேன் மழை' சிறப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை(21) சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் நடைபெற்றது.

பஸ்பெக் அமைப்பின் பொதுச்செயலாளரும் நவமணி அசிரிய பீட உறுப்பினருமான கியாஸ் ஏ.புஹாரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம அதிதியா தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித் துறைத் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அப்துல்லா, விஷேட அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக மாவட்டச் செயலாளர் எம்.ஐ.எம்.அமீர், கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண முன்பள்ளிகளின் கல்விப் பணியகத்தின் தவிசாளர் பொன்.செல்வநாயகம்,சமாதானக் கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளர் எஸ்.எல்.றியாஸ், சம்மாந்துறை வலயக் கல்வி அலவலக கணக்காளர் எம்.கெந்திர மூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு சிறப்பாக இயங்கிய முன்பள்ளிகளுக்கு 'வித் ஒளி' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும் இளம் பாடகர் விருது மற்றும் அபினையப் போட்டிகளில் மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .