2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

'தியாகத் திருநாள்' கவியரங்கு

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 26 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.ஏ.ஸிறாஜ்,எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் பேரவையின் ஏற்பாட்டில் புனித ஹஜ் பெருநாளையொட்டி 'தியாகத் திருநாள்' கவியரங்கு நிகழ்வு வெள்ளிக்கிழமை (25) மாலை 5.30 மணிக்கு பாலமுனை அல் ஹிதாயா வித்தியாலய திறந்த வெளியரங்கில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் பேரவையின்  உப- தலைவரும் கவியரங்கின் தலைவருமான கலாபூஷணம் பாலமுனை பாறூக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். காஸிம் பிரதம அதிதியாகவும்,  அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின்  பத்வாக் குழுவின் செயலாளர்

ஐ.எல்.எம். ஹாஸிம் சூரி மதனி கௌரவ அதிதியாகவும் அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் பேரவையின் தலைவர் கலாபூஷணம் மாறன் யூ செயின் உட்பட எழுத்தாளர்கள் கலைஞர்கள் ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது, கலாபூஷணம் ஆசுகவி அன்புடீன், கலாபூஷணம் ஏ.எல். இஸமாலெவ்வை, கலாபூஷணம் கே.எம்.ஏ அஸீஸ், கலாமணி மக்கின் ஹாஜி, கவிஞர் விஜிலி, கவிஞர் ரியாஸ் குராணா, கவிதாயினி  பர்ஸானா றியாஸ் ஆகியோர் கவிதை வழங்கினர்.

இதேவேளை, கவிஞர்களான கலைப்பிறை ஜே. வஹாப்தீன், எழுகவி எம்.யூ.எம். ஜெலீல், பாலமுனை முபீத், ஆகியோர் கவிப் பொழிவு நிகழ்த்தினர்.

 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X