2021 மார்ச் 04, வியாழக்கிழமை

தமிழர் பாரம்பரியத்தின் நாட்டுக்கூத்து

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 17 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றாகிய நாட்டுக்கூத்து அழிந்துகொண்டு செல்வதனால் அவற்றை பேணிப்பாதுகாத்து எதிர்கால தலைமுறையினருக்கும் தமிழர்களின் பாரம்பரிய கலையினை இட்டுச்செல்வதற்கு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில், மண்முனைமேற்கு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நாட்டுக்கூத்து விழா வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலய வளாகத்தில் பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் தலைமையில் இடம்பெற்றது.

இவ்விழாவில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.விமலநாதன் கலந்து கொண்டதுடன் கௌரவ விருந்தினராக மாவட்ட கலாச்சார இணைப்பாளர் ரி.மலர்ச்செல்வன் மற்றும் பாடசாலை அதிபர் எம்.யோகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒரு இனத்தின் அடையாளங்களாக மொழி, கலாச்சாரம் காணப்படுகின்றது. இன்று இக்கலைகளில் ஒன்றாகிய கூத்துக்கலை அழிந்துகொண்டும் அதேவேளை திரிபுபட்டுக் கொண்டும் செல்கின்ற நிலையில் வவுணதீவு மற்றும் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவுகளில் சில கிராமங்களில் அங்குள்ள கலைஞர்களால் இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இக்கலையினை அழியவிடாது பேணிபாதுகாத்து எதிர்கால தலைமுறையினருக்கும் இட்டுச்செல்வதற்காக இவ்வாறான விழாக்களை ஏற்பாடு செய்கின்ற நிலை இப்பகுதியில் காணப்படுகின்றது. அந்தவகையிலே இவ்விழா முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது வவுணதீவு விபுலானந்தா கலைக்கழகத்தின் நச்சுப்பொதிகை வடமோடி நாட்டுக்கூத்தும், மற்றும் கன்னங்குடா முத்தமிழ் மன்றத்தின் வாளவீமன் சுந்தரி கல்யாணம் தென்மோடி நாட்டுக்கூத்தும் மேடையேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • K.Rushangan Monday, 18 October 2010 11:01 AM

    நல்ல முயற்சி. மாவட்ட கலாசார அலுவர் மலர்ச்செல்வனுக்குப் பாராட்டுக்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .