2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

அமீர்கானின் இனிய இசை விருந்து

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 28 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் இசைகலைஞர் அமீர்கானின் 'இன்னிசை இரவுகள்' நிகழ்ச்சி கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு பிறைட்டன் றெஸ்ட் ஹோட்டலில் நடைபெற்றது. நம்நாட்டின் புகழ்பூத்த இசை கலைஞர்களான கல்முனை சிவா, கே.சிறிஸ்கந்தரூபமணி போன்றோரின் இன்னிசையில் சகாயம் பெர்ணான்டோ, எம்.திருவருட்செல்வி, என்.நவநீதன் போன்றோருடன் அமீர்கானும் அருமையான பாடல்களை வழங்கினர்.

வழமையான குத்துப்பாடல்கள் என்ற வரைமுறையை மீறி இடைக்கால பாடல்களை இனிமையாக வழங்கிய இனிய இசை நிகழ்வாக இது அமைந்திருந்தமை சிறப்பானதாகும். இந்நிகழ்வில் கலந்துகொண்ட பார்வையாளர்கள் விரும்பிக் கேட்ட பாடல்களையும் இந்த இசை கலைஞர்கள் அந்த மேடையிலேயே பாடி பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டனர். செல்வி எஸ்.கார்த்திகாவின் அழகிய நடனம் எல்லோரையும் மெய்சிலிர்க்க வைத்தது. சினிமா பாடலுக்கு பரத நாட்டியம் ஆடியவிதம் எல்லோரையும் கவர்ந்தது.

அமீர்கானின் இனிய இசை விருந்து நிகழ்ச்சியிலே கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயர் அஸாத் ஷாலி, சுயாதீன தொலைக்காட்சியின் பணிப்பாளர் சபை உறுப்பினர் புரவலர் ஹாஸிம் உமர், கொழும்பு மாநகரசபை உறுப்பினர் ஷாம் நவாஸ், சமூகஜோதி றபீக், தேசபந்து எஸ்.எம்.தாஜ்மஹான் ஆகிய பிரபலங்கள் கலந்துகொண்டு சிறப்பித்ததோடு பங்குபற்றிய கலைஞர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தமையும் குறிப்பிடத்தக்கது. Pix: Pradeep Pathirana


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .