2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

அழகுமயில் ஆட...

A.P.Mathan   / 2011 ஜூலை 17 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

'நாட்டிய கலாமந்திர்' இயக்குநர் கலாசூரி ஸ்ரீமதி வாசுகி ஜெகதீஸ்வரனின் மாணவியரான சிவகாமி -சிவப்பிரியா சகோதரிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் நேற்று சனிக்கிழமை மாலை 6 மணிக்கு கொழும்பு, பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் புதுடில்லியைச் சேர்ந்த பரதாநாட்டிய தாரகை ஸ்ரீமதி ரமா வைத்தியநாதன் பிரதம விருந்தினராகவும், வீரகேசரி பத்திரிகையை வெளியிடும் எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் (சிலோன்) லிமிட்டெட்டின் நிர்வாக இயக்குநரும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைவருமான எஸ்.குமார் நடேசன் கௌரவ அத்தியாகவும், அகில இலங்கை கம்பன் கழக 'கம்பவாரிதி' இ.ஜெயராஜ் சிறப்பு அதிதியாகவும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் - இரத்தினகலா தம்பதியரின் புதல்வியர்களான சிவகாமி, சிவப்பிரியா ஆகியோர் கொழும்பு விச்சளி சர்வதேச பாடசாலை மற்றும் கொழும்பு பீவர் சர்வதேச பாடசாலையில் ஆகியவற்றின் மாணவியராக இருந்தபோதிலும் தமிழ் பாரம்பரிய கலைகளில் அவர்களுக்குள்ள ஈடுபாட்டை தமது நடனத்தின் மூலம் சபையினருக்கு நிரூபித்தனர்.

பார்ப்பவர் கண்களுக்கு விருந்தாக அமைந்த சகோதரிகளின் அரங்கேற்ற நடனங்களில் சிலவற்றையும் கலந்துகொண்ட அதிதிகளையும் படங்களில் காணலாம். Pix: Indrarathna Balasoorya


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .