Kogilavani / 2011 செப்டெம்பர் 15 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(க.கோகிலவாணி)
கொழும்பு ஜோன் டி சில்வா அரங்கில் இடம்பெற்று வரும் 'தேசிய சிறுவர் நாடக விழா 2011' வின் நான்காம் நாளான நேற்று புதன்கிழமை 'மல் பெத்தே சூத்தரே', 'மே அலியாட கெயக் ஓனே' 'தரு பபா' ஆகிய சிங்கள மொழி நாடகங்களும் 'சூரியன் மறைந்தது சந்திரன் உதித்தது' எனும் தமிழ் மொழி நாடகமும் மேடையேற்றப்பட்டன.
'மல் பெத்தே சூத்தரே'
வழமையாக சிறார்கள் ஒரு வீட்டின் முற்றத்தில் ஒன்றுக் கூடி விளையாடுவார்கள். அவர்களில் ஒரு சிறுமிக்கு புதிய விளையாட்டுப் பொருள் கையில் கிடைத்துவிட மற்ற நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவதை தவிரத்துக்கொள்கிறாள். இதனால் மனமுடைந்து போன மற்ற நண்பர்கள் அச்சிறுமியை திருத்துவதே இந்நாடகத்தின் கதைக்கருவாக அமைந்துள்ளது.
குளியாப்பிட்டிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க தேசிய பாடசாலை மாணவர்கள் இந்நாடகத்தில் பாத்திரமேற்றிருந்தனர். இப்பாடசாலையின் ஆசிரியர் எம்.டி.பத்மிலா மதுஷானி இந்நாடகத்தை எழுதி நெறியாள்கை செய்திருந்தார்.
.jpg)
.jpg)
.jpg)
'மே அலியாட கெயக் ஓனே'
ஏனைய நாடகங்களைப் போலல்லாது சிறுவர்களின் சிந்தனை திறமைக்கு இடமளிப்பதும் அவர்களது எண்ணங்களைபோல் அவர்களை இயங்கவிடுவதும் இந்நாடகத்தின் மிக முக்கிய அம்சமாகக் காணப்பட்டது. மற்றவர்களது கண்ணுகளுக்கு புலப்படாத வெள்ளை யானைக் குட்டியொன்று இவர்களது கண்களுக்கு தெரிய அந்த யானைக்குட்டியுடன் இவர்களது கதை நகர்கிறது.
இந்நாடகத்தை கொழும்பு 'இன்டர் எக்ட் ஆர்ட் மற்றும் பிளெக் பொக்ஸ் தியட்டர்' குழுவினர் நடித்திருந்தனர். நதீகா தரங்கனி, அருண சாந்த ஆகியோர் இந்நாடகத்தை எழுதி நெறியாள்கை செய்திருந்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
'சூரியன் மறைந்தது சந்திரன் உதித்தது'
அரங்கில் கூடியிருந்தவர்களின் கைதட்டல்களை அதிகமாகப் பெற்ற நாடகம் 'சூரியன் மறைந்தது சந்திரன் உதித்தது' கூறலாம். ஏனைய நாடகங்களிலிருந்து முற்றும் முழுதாக வேறுபட்ட ஒரு நகைச்சுவை நாடகமாக இதனை அளிக்கை செய்திருந்தார்கள். கே.எம்.மித்ரரட்ன என்பவர் இந்நாடகத்தை இயக்கியிருந்தார். இந்நாடகத்தில் சிங்கள மாணவர்கள் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
'தரு பபா'
சிறுவர்களின் ஒற்றுமையை விளக்கிடும் நாடகமாக இந்நாடகம் மேடையேற்றப்பட்டது. விளையாட்டு பொம்மைகளைக் கொண்டு இந்நாடகத்தின் கதை நகர்ப்பத்தபடுகின்றது. மாத்தறையைச் சேர்ந்த றுகுனு கலாசார நிலையத்தினரால் இந்நாடகம் அளிக்கை செய்யப்பட்டது. டி.டபிள்யூ. நவமின இந்நாடகத்தை எழுதி நெறியாள்கை செய்திருந்தார்.
ஜோன் டி சில்வா அரங்கில் இடம்பெற்று வரும் இந்நாடகங்களை பார்வையிடுவதற்கான அனுமதி இலவசமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
8 hours ago
26 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
26 Oct 2025