2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

'முற்றத்து அறுகுகள்' கவிதை நூல் வெளியீடு

Kogilavani   / 2011 ஒக்டோபர் 23 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)
களுதாவளை லி.ரகரன் எழுதிய 'முற்றத்து அறுகுகள்'  கவிதை நூல் வெளியீடும் எழுத்தாளர் கௌரவிப்பும் நேற்று சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு, களுதாவளையில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய கல்விப் பணிப்பாளர் க.பாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை வங்கியின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளரும் எழுத்தாளருமான, ரா.நல்லையா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.கனகசபை ஆகியோர்; அதிதிகளாக கலந்துகொண்டனர்.

இதன்போது நூலின் முதல் பிரதியினை களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்களுக்கு நூலாசரியர் வழங்கிவைத்தார்.

அத்துடன் குறித்த பகுதியில் தமிழ் மொழிக்கு பெரும் பங்காற்றி வரும் கலாபூசணம் ஆ.அரசரெட்ணம், கலாபூசணம் தேனுரான், கோவிலூர் தணிகா, மு.கு.சச்சிதானந்த குருக்கள், ரா.நல்லையா ஆகியோர் பொன்னாடைபோர்த்தி வாழ்த்துப்பா வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் 'முற்றத்து அறுகுகள்'கவிதை நூலினை எழுதிய லி.ரகரனை கிராம மக்கள் பாராட்டி கௌரவித்தனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X